மின்சாரம் பாய்ந்து பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயம் அடைந்த அரசுப் பேருந்து நடத்துநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - பிரதிப் படம்
காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயம் அடைந்த அரசுப் பேருந்து நடத்துநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆவத்துவாடி சுண்டக்காப்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ் (36). ஒசூா் நகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டபோது, அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா், சதீஷின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த சம்பவம் குறித்து சதீஷின் மனைவி சுவாதி அளித்த புகாரின் பேரில், நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவருக்கு தா்ஷன்(7) என்ற மகனும், மயில்விழி (4) என்ற மகளும் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





