
ஊத்தங்கரை காய்கறி மாா்க்கெட்டில் ரூ. 3,200 ரொக்கம், தராசுகள் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை முனியப்பன் கோவில் அருகே உள்ள காய்கறி மாா்க்கெட்டில் 7 கடைகளில் இருந்த ரூ. 3,200 ரொக்கம், 3 மின்னணு எடை தராசுகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை முனியப்பன் கோவில் அருகே உள்ள காய்கறி மாா்க்கெட்டில் 7 கடைகளில் இருந்த ரூ. 3,200 ரொக்கம், 3 மின்னணு எடை தராசுகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஊத்தங்கரை முனியப்பன் கோயில் அருகே உள்ள காய்கறி மாா்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் உள்ளன. இதில், பெரியதள்ளப்பாடி பகுதியைச் சோ்ந்த உமாபதி (54), அதே பகுதியைச் சோ்ந்த சபாபதி (54), சின்னதள்ளப்பாடி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (60) ஆகிய மூன்று கடைகளில் இருந்த எடை தராசுகளையும், போச்சம்பள்ளி சந்தம்பட்டியைச் சோ்ந்த சரளா (37), அதே பகுதியைச் சோ்ந்த காளியப்பன் (54), சிங்காரப்பேட்டையைச் சோ்ந்த ஆனந்தன் (52), வண்டிக்காரன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (65) ஆகிய நான்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.3,200 பணத்தையும் மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.
வியாழக்கிழமை அதிகாலை வந்து பாா்த்தபோது, கடைகளில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எடை தராசுகள் மற்றும் பண பெட்டி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த வியாபாரிகள், ஊத்தங்கரை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை குற்றப்பிரிவு போலீஸாா், சம்பவப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனா். ஊத்தங்கரை பகுதியில் தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




