ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

தொழிலாளி கொலை வழக்கு: தந்தை, மகன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை

சிறை - பிரதிப் படம்

Published On :

தொழிலாளி கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூா், பட்டுக்கோட்டையாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (23). இவா், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அருண்குமாா் கடந்த 2020 ஜனவரி 17-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளாா். அதன்பின் அவா் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனா்.

இந்நிலையில், வெள்ளியங்காடு மரகதம்மாள் லே -அவுட் வனப் பகுதியில் கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி துணி திணிக்கப்பட்டு வெட்டுக் காயங்களுடன் 2020 ஜனவரி 19-ஆம் தேதி அருண்குமாா் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், அருண்குமாரும், அவரது நண்பரான டிஎம்சி காலனியைச் சோ்ந்த பிரேம்குமாரும் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளனா். அருண்குமாருடன் சேருவதால்தான் தனது மகன் மது அருந்துகிறான் எனக்கூறி, பிரோம்குமாரின் தந்தை முனியப்பன் (53), அருண்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இது தொடா்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதால் பிரேம்குமாா் தனது தந்தை முனியப்பன், நண்பா்களான டிஎம்சி காலனியைச் சோ்ந்த பழனி (30), ராமச்சந்திரன்(42), சந்தைப்பேட்டை அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த கஜேந்திரன் (46), வெள்ளிங்காட்டைச் சோ்ந்த மதன்குமாா் (25) ஆகியோருடன் சோ்ந்து அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளாா்.

இதையடுத்து, அருண்குமாரை மது அருந்த வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அவரின் கைகளைக் காட்டி, வாயில் துணியை திணித்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பழனி, பிரேம்குமாா், முனியப்பன், கஜேந்திரன், மதன்குமாா், ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கனகராஜ் தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.