விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் முதல்வர்
தமிழக விவசாயிகளின் நலனுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார் என்று தொழில் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.


தமிழக விவசாயிகளின் நலனுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார் என்று தொழில் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
திருச்செங்கோடு வேலூர் சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கருத்தரங்கு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தமிழக விவசாயிகளின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா இடைவிடாத போராட்டம் நடத்தியதின் விளைவாக, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசு இதழில் வெளியாக உள்ளது. கரும்புக்கு விலை உயர்த்திக் கொடுத்தவர் தமிழக முதல்வர். மேலும், சிறு விவசாயிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கியுள்ளார். விவசாயக் கருவிகளை மானிய விலையில் வழங்கியுள்ளார் என்றார் அவர்.
பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி காவிரிப் பாசன விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத் தந்ததற்கும்
பம்புசெட் அமைத்து மின் இணைப்பு பெற முடியாமல் தவித்த விவசாயிகளுக்கு சலுகை வழங்கியதற்காகவும் தமிழக முதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சமும், பதக்கமும் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, மானாவாரி பகுதி விவசாயிகளுக்கும் பரிசுத் தொகைகளை அறிவித்த முதல்வருக்கு கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயன்கள் கிடைக்க ஆவன செய்த முதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்தரங்கிற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலர் மண்க்காட்டார் என்ற சின்னுசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கறுப்பண்ணன் வரவேற்றார். திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசுப்பிரமணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் காந்தி முருகேசன், நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில விசாயப் பிரிவு செயலர் தங்கமுத்து, மாநிலத் தலைவர் கோவிந்தராஜன், முன்னாள் எம்எல்ஏ கலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...