வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நம்மால் முடியும் என்ற துடிப்பு இருக்க வேண்டும்செங்குந்தர் கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில்

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:21 pm

தினமணி

நம்மாலும் சாதிக்க முடியும்  என்றத் துடிப்பு  இளைஞர்களிடம் இருக்க வேண்டும் என்றார் சந்திரயான் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.

திருச்செங்கோடு செங்குந்தர் கலை, அறிவியல் கல்லூரியில்  சனிக்கிழமை நடைபெற்ற  17 ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி அவர் பேசியது:

பட்டம் பெறுவது மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆகும்.  பட்டம் பெறுவதுடன் கல்வி முடிந்து விட்டதாகக் கருதக்கூடாது. இந்தியாவில் 7 சதம் பேருக்குத்தான் உயர்கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.

அத்தகைய வாய்ப்பைப்  பெற்ற மாணவ, மாணவிகள் வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைக்கும்போது தங்களுக்கென  ஒரு இலக்கை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதை  நீஙகள் முடிவு செய்து கொள்ளுங்கள். எங்களது வழிகாட்டுதல் உங்களுக்கு வழித் துணையாக வரும். 

மகாத்மா காந்தி, அன்னை தெரசா போன்றவர்களைப் பார்த்து நம்மாலும் சாதிக்க முடியும் என்ற வேகத்தை, துடிப்பை இளைஞர்கள் பெற வேண்டும்.  மாணவர்களாகிய உங்களாலும் என்னைப்போல ஆக முடியும். வேலைவாய்ப்பை நாடி நாம் செல்லும்போது  அவர்கள்  என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்குத் தக்கபடி நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். உலகம் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அதனை நாம் கொடுத்தால்  நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதனை உலகம் நமக்குத் தரும் என்றார் அவர்.

விழாவிற்கு  கல்லூரியின் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். கெüரவத் தலைவர் டிபி ஆறுமுகம், தாளாளர் ஆர். ராஜசேகரன், முதல்வர் ஆறுமுகம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.