வைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

  குமாரபாளையம் அருகே சீரான முறையில், தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி,  சனிக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பேருந்தை வழிமறித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :12 மே 2013, 5:30 am IST

  குமாரபாளையம் அருகே சீரான முறையில், தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி,  சனிக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பேருந்தை வழிமறித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 குமாரபாளையத்தை அடுத்துள்ள தட்டாங்குட்டை சிற்றூராட்சி, காந்திநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதுமான குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும், ஆழ்குழாய்க் கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் பழுதானதால் தண்ணீருக்கு பெரும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பல முறை சிற்றூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

 இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை காலிக் குடங்களுடன் சடையம்பாளையம் அருகே சென்ற   பேருந்தை மறித்து,  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்து, அங்கு வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் ஓரிரு நாள்களில் குடிநீர் விநியோகத்தை சீர் செய்வதாகக் கூறி சமரசப் பேச்சில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.