இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

அனுமதியின்றி குளத்தில் மண் எடுத்த 2 லாரிகள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

பரமத்தி அருகே உள்ள இடும்பன் குளத்தில் உரிய அனுமதியின்றி மண் எடுத்த 2 லாரிகள், ஒரு ஜேசிபி இயந்திரத்தைப் பொதுமக்கள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.

Updated On :

பரமத்தி அருகே உள்ள இடும்பன் குளத்தில் உரிய அனுமதியின்றி மண் எடுத்த 2 லாரிகள், ஒரு ஜேசிபி இயந்திரத்தைப் பொதுமக்கள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.

பரமத்தி அருகே சுமார் 360 ஏக்கர் பரப்பளவில் சானிப்பட்டி கிராமத்தில் இடும்பன் குளம் உள்ளது. இக் குளத்துக்குத் தண்ணீர் வரத்து இல்லாததால் அரசு அனுமதியின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

இக்குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அடிக்கடி குளத்து மண்ணை வெட்டி எடுத்து தனியார் செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் சனிக்கிழமை இரவு சிலர் இடும்பன் குளம் பகுதியில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மண்ணை வெட்டி எடுத்து லாரிகள் மூலம் அனுப்பி வந்துள்ளனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவில் ஒன்று திரண்டு லாரிகளையும் ஜே.சி.பி. வாகனத்தையும் தடுத்து நிறுத்தி பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் வட்டாட்சியர் லோகநாதன், பரமத்தி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மண் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இதுவரை எவ்வளவு மண் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

பரமத்தி வேலூர் வட்டாட்சியர் லோகநாதன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.