உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

பூரண மதுவிலக்குக் கோரி தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம்

பூரண மதுவிலக்குக் கோரி தமாகா சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் ஏஜி தேவாலயம் முன்பு ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றனர்.

Published On :

பூரண மதுவிலக்குக் கோரி தமாகா சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் ஏஜி தேவாலயம் முன்பு ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றனர்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் மதுவினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி பூரண மது விலக்கை அமல்படுத்துவதற்கு ஒரு கோடி கையெழுத்துப் பெறும் இயக்கத்தை வாசன் கடந்த மாதம் தொடக்கி வைத்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவின் சார்பில் சேலம் சாலையில் உள்ள ஏஜி தேவாலயம் முன்பு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்திற்கு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமாகா நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஷேக் நவீத், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜாகிர் பாஷா முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கையெழுத்து பெறப்பட்டது. மாவட்டப் பொருளர் சுப்பிரமணி, நகரத் தலைவர் சக்தி வெங்கடேஷ், மாவட்டச் செயலர் ராம்குமார், குப்புசாமி, நூர் அகமது, முபாரக் பாஷா. சின்னுசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.