தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

ஏழை மாணவர்களுக்கும் உலகத் தரமிக்க கல்வி வாய்ப்பை வழங்கியவர் ஜெயலலிதா

ஏழை மாணவர்களும் உலகத்தரமிக்க கல்வி பெறும் வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிக் கொடுத்துள்ளதாக தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

Updated On :

ஏழை மாணவர்களும் உலகத்தரமிக்க கல்வி பெறும் வாய்ப்பை முதல்வர்

ஜெயலலிதா உருவாக்கிக் கொடுத்துள்ளதாக தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, சேந்தமங்கலம், களங்காணி ஆகிய இடங்களில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சாந்தி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். தமிழக தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான நலத்திட்டங்கள், 4 செட் சீருடைகள், விலையில்லாக் காலணிகள், பாடப்புத்தகங்கள், அவற்றை எடுத்துச் செல்ல அழகான புத்தகப்பை என அனைத்தையும் முதல்வர் வழங்கி வருகிறார். மாணவர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது அனைவரும் நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற்று 100 சத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும் தான்.

வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியில் அனைவருக்கும் கணினி அறிவு கட்டாயம் தேவை என்பதற்காக பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிக்கணினிகளை ஏழை வீட்டுப் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதற்காக இலவசமாக வழங்கி வருகிறார்.

இத்தகைய திட்டத்தால் தமிழகத்திலுள்ள மாணவ, மாணவிகள் கல்வியில் உயர்ந்து, கணினி அறிவில் சிறந்து விளங்குவதோடு உலகத்தரம் மிக்க கல்வியைப் பெற்று வருகின்றனர்.

இதனால் தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதோடு, தமிழகம் 100 சதவிகிதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக விரைந்து உருவாகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

முதல்வரின் திட்டங்களால் அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்து முதல்வரின் சிறப்புப் பரிசை பெற்றனர். இதைப் போலவே எல்லா மாணவ, மாணவியரும் நன்றாகப் படித்து சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும் என்றார்.

மொத்தம் 22 பள்ளிகளைச் சேர்ந்த 2,051 மாணவ, மாணவியருக்கு ரூ.76.50 லட்சம் மதிப்பிலான விலையில்லா மதிவண்டிகளையும், 18 பள்ளிகளைச் சேர்ந்த 1,757 மாணவ, மாணவியருக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளையும் அமைச்சர் வழங்கினார்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ், கோட்டாட்சியர் எம்.கண்ணன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.