எளையாம்பாளையம் விவேகானந்தா சிறப்பு மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் சுமார் 200 பேருக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கொழுப்புச் சத்து பரிசோதனை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மு.கருணாநிதி, கிருஷ்ணவேணி கருணாநிதி, மு.ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன் மற்றும் டாக்டர் மு.கிருபாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.