மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

உள்ளிருப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவது என முதுகலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:35 am

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவது என முதுகலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பது, உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவது குறித்த ஆயத்தக் கூட்டம், ராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெகதீசன் பேசினார்.
இதில், மாநில அமைப்புச் செயலர்கள் புஷ்பராஜ், செல்வம்,  செய்தி தொடர்பாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்துப் பேசினர். கூட்டத்தில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியின்போது உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை தமிழக அரசு களைய வேண்டும் என்ற நோக்கில், முதுகலைஆசிரியர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் குமரசேன், சுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.