உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத பகுதியில் இருந்த 40 மதுபான கடைகள் மூடப்பட்டன.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத பகுதியில் இருந்த மொத்தம் 40 மதுபான கடைகள் மூடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 178 மதுபான கடைகள் இயங்கி வந்தன. அவற்றில் நகராட்சி பகுதியில் 35 கடைகள், பேரூராட்சி பகுதியில் 5 கடைகள் என 40 மதுபான கடைகள் மூடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.