சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

ஆக.11-இல் நாமக்கல்லில் கம்பன் விழா பேச்சுப் போட்டி: கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்

கம்பன் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நாமக்கல்லில் வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

Published On :

கம்பன் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நாமக்கல்லில் வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கம்பன் கழகச் செயலர் முனைவர் அரசு பரமேஸ்வரன் தெரிவித்தது:
கம்பன் கவிச்சுவையைக் காலமெல்லாம் நினைத்து போற்றும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நாமக்கல் சனு ஹோட்டலில் வரும் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
விழாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்தப் போட்டியில் கம்பன் போற்றும் அரசியல், கம்பன் காட்டும் சகோதரத்துவம், கம்பன் நோக்கில் வீரம் ஆகிய மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும். 
கலை, அறிவியல் கல்லூரி, கல்வியியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை,பாலிடெக்னிக் மற்றும் செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம். 
ஒரு கல்லூரியில் இருந்து 3 பேருக்கு மட்டுமே அனுமதி, பேசுவதற்கு 5 நமிட கால அவகாசம் வழங்கப்படும். குலுக்கல் முறையில் அவரவர் தலைப்புக்கு ஏற்ப பேச வேண்டும்.
முதல் பரிசாக ரூ. 5,000. இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும். பரிசுகள் கம்பன் விழாவில் வழங்கப்படும். முதல் பரிசு பெறும் மாணவ, மாணவியர் விழா மேடையில் பேச அனுமதி உண்டு.
பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9442569699, 9443224921 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.