ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்தியசுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அம்மன் முன் உள்ள கம்பத்துக்கு அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர். இதுபோன்று செய்வதால் பெண்களுக்கு திருமணத் தடை நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதிகம். இதனால், ஏராளமான பெண்கள் கம்பம் முமுவதும் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து வழிபட்டனர். பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு அதிரசம் மாலை அணிவித்து வெள்ளிக் காப்பு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மனை வழிபட ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.