தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்

பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் பெ.மோகன் தலைமை வகித்தார். இம்முகாமில் வட்டார துணை வேளாண் அலுவலர் பெ.பசுபதி பங்கேற்று பிரீமியத் தொகை ஒரு ஏக்கர் மக்காச்சோளத்துக்கு ரூ.464, சோளத்துக்கு ரூ.266, ராகிக்கு ரூ.242, உளுந்து, பாசிப்பயறு, துவரை ஆகியவற்றுக்கு ரூ.286, நிலக்கடலைக்கு ரூ.467, பருத்திக்கு ரூ.1,518 என குறிப்பிட்டார். பயிர் காப்பீடு செய்வதற்கான இறுதி நாள் ஆக.16 என்பதையும் தெரிவிக்கப்பட்டது.
மேலும்,  பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களான முன்மொழிப் படிவம், விண்ணப்பம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல், சிட்டா நகல், வங்கிக் கணக்கு புத்தகம் பற்றியும், பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தும் இடங்களான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
இம்முகாமில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ர.சந்திரசேகரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ம.விக்னேஸ்வரி, வெ.விக்னேஷ், உதவி வேளாண் அலுவலர் பெ.ராமமூர்த்தி, பயிர் அறுவடை பரிசோதனையாளர் செ.பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.