
பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் படுகை அணையில் தடையை மீறி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த போது அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை ஜேடர்பாளையம் அருகே போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஜேடர்பாளையம் படுகை அணை மற்றும் ராஜா வாய்க்காலில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன் பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பாண்டமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (32), கண்ணன் (22) மற்றும் ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த பாலா (25) ஆகிய மூன்று பேரும் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் தடையை மீறி காவிரியில் குளித்தனர். அப்போது முத்துகிருஷ்ணன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
தகவலின் பேரில் அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீஸார் மீனவர்கள் உதவியுடன் பரிசலில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், கண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக போலீஸார் தேடினர். இந்நிலையில் புதன்கிழமை இரவு காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முத்துகிருஷ்ணனின் சடலம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கண்டிபாளையம் பரிசல் துறையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீஸார் முத்துகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






