முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

நாளை சேந்தமங்கலத்தில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம்

சேந்தமங்கலத்தில் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.31) நடைபெறவுள்ளது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

சேந்தமங்கலத்தில் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.31) நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் திறன் பயிற்சி, திறன் விழிப்புணர்வு மற்றும் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புகள் குறித்து கிராமப்புற வேலை நாடுநர்களை சென்றடையும் வகையில், நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முகாம் நடத்தப்படுகிறது.
 அதன்படி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் 5-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்.
 மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அழகு கலை, தையல் பயிற்சி, சிசிடிவி கேமரா பொருத்தும் பயிற்சி, கணினி இயக்குபவர், எலக்ட்ரீஷியன், வெல்டர், ஆட்டோமேட்டிவ் சர்வீஸ் டெக்னீஷியன் பயிற்சி மற்றும் ஓட்டுநர் பயிற்சி போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
 விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து, விரும்பும் பயிற்சியை இலவசமாக பெறலாம். மேலும், 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மற்றும் பட்டதாரிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அங்கேயே நடைபெறுகிறது. இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.