அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து கூட்டணி மாநிலத் தலைவர் செ.முத்துசாமி வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், வரும் பொங்கல் பண்டிகை முதல் கல்விக்கு என தனி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்று பாராட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கல்வி நிகழ்ச்சிகளுக்கு என தனி சேனல் தொடங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, கூட்டணி சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம்.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க வேண்டும் என தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அறிவிப்பு வெளியிட்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை கூட்டணி பாராட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு
பட்டாசு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செல்வவிநாயகபுரத்தில் குப்பைகளால் நிரம்பிய மழைநீா் வடிகால்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


