விவசாய விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள்அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் குமாரபாளையத்தை அடுத்த படைவீடு, சாமண்டூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், இத்திட்டத்தை சாலையோரங்களில் புதைவடக் கம்பிகள் மூலமாக நிறைவேற்றக் கோரியும் கடந்த 17-ம் தேதி முதல் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகமெங்கும் தொடர் காத்திருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
குமாரபாளையத்தை அடுத்த சாமண்டூரில் இவ்வமைப்பின் மாவட்டச் செயலர் பி.பெருமாள் தலைமையில் நடைபெற்று வரும் இப்போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இக் கோரிக்கையை வலியுறுத்தியும், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வு காணக் கோரியும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலர் கே.எஸ்.மூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர் பி.யுவராஜ், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி, மாவட்ட துணைச் செயலர் எஸ்.சேகர், மாவட்ட பொருளாளர் அ.குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கந்தசாமி, சேலம் மாவட்டச் செயலர் ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆதிநாராயணன், அசோகன், பள்ளிபாளையம் ஒன்றியச் செயலர் கே.ஆர்.முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.மணிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர்
செல்வராஜ் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.
மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் கே.கே.கணேசன், ஒன்றியச் செயலர் என்.மணி, குமாரபாளையம் நகரச் செயலர் விஸ்வநாதன், காங்கிரஸ் நகரத் தலைவர் ஏ.ஜானகிராமன், நகரப் பொருளாளர் ஆர்.சிவராஜ், கொமதேக மாவட்டச் செயலர் நதி ராஜவேல், பள்ளிபாளையம் நகரச் செயலர் வெங்கடேஸ், இளைஞரணிச் செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, போராட்டத்தை நிறைவு செய்த விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சென்னையில் ஜன.2-ம் தேதி முதல் விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









