47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

86 தலைமைக் காவலர்கள் சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் 86 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:11 am

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 86 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பத்து ஆண்டுகள் பணி முடித்த 86  தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு அளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு  உத்தரவிட்டுள்ளார்.
இவர்களில் நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தனிப் பிரிவு காவலர் முருகேசன், காவலர்கள் ஆனந்தகுமார், சந்திரசேகர், மணிவேல், ராஜா உள்ளிட்ட 11 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் ராசிபுரம் காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 7 தலைமைக் காவலர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 86 தலைமைக் காவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளதால், இவர்களில் சிலருக்கு வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாறுதல் அளிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.