தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஜூலை 11-இல் நாமக்கல் அரசு கல்லூரியில் சிறப்புப் பயிற்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உயிரியல் துறை மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On :9 ஜூலை 2018, 3:11 am

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உயிரியல் துறை மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வசந்தாமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், விலங்கியல் மற்றும் தாவரவியல் துறை சார்பில் வரும் 11-ஆம் தேதி உயிரிய எண்ணிம களப்புத்தகம் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடக்கிறது.
இப்பயிற்சியில் விலங்கியல் தாவரவியல், உயிர் தொழில் நுட்பவியல், நுண் உயிரியல் போன்ற உயிரியல் சார்ந்த துறை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கலாம். அதில் உயிரினங்களின் வகைகள், குணங்கள், செயல்பாடுகள் போன்றவற்றை, காகிதமே இல்லாமல் செல்லிடப்பேசி மூலம் கண்டறிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவற்றிக்கு தேவையான மென் பொருள்களையும் பதிவிறக்கம் செய்ய பயிற்சி அளிக்கப்படும்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மத்திய தானிய ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி இளங்கோவன், சிறப்பு பயிற்சியாளராக பங்கேற்கிறார்.
இப் பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 9-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினத்தை 9487446269 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் பேராசிரியர் வெஸ்லியை 9443213887 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.