பவானி - குமாரபாளையம் பழைய பாலத்தில் ஏற்பட்டுள்ள குழியால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
எனவே, இதனை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானி - குமாரபாளையம் இடையே காவிரி ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தில் மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், பாலம் வலுவிழந்ததால் தற்போது இலகு ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இரு நகரங்களுக்கு இடையில் எளிதில் சென்று வர பொதுமக்கள் பெரிதும் பழைய பாலத்தையே பயன்படுத்தி வரும் நிலையில், பாலத்தின் நடுவே குழி ஏற்பட்டுள்ளது.
சிறிதாக ஏற்பட்ட இக்குழி தற்போது பெரிதடைந்து, எதிர்பாராமல் யாரேனும் கால் வைத்துவிட்டால் ஆற்றுக்குள் இடறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த, தகவலின் பேரில் குமாரபாளையம் போலீஸார் குழியின் மேல்பகுதியில் டயர் வைத்தும், கொடி கட்டியும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயினும், இரவு நேரத்தில் செல்லும்போது பொதுமக்கள் அச்சத்திலேயே செல்ல வேண்டியுள்ளது. எனவே, இப்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதினைச் சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

