திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினரை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் வரவேற்றார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட திருமலைபட்டி ஊராட்சி, தேத்துகாடு பகுதியில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக் கட்சியிலிருந்து விலகி புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கெளதம் தலைமையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வரவேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காந்திசெல்வன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இந் நிகழ்ச்சியில் திருமலைபட்டி ஊராட்சி செயலர் லிங்கப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த், மாணவர் அணி அமைப்பாளர் குமார், வழக்குரைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் பாபு, ஆனந்த், அய்யாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







