எம்.பி. நிதியில் இருந்து நாமக்கல், ராசிபுரத்தில் ரயில்வே மேம்பாலங்களில் மின்விளக்கு வசதி

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் செலவில் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் ரயில்வே மேம்பாலங்களில் மின்விளக்கு வசதி தொடங்கி வைக்கப்பட்டது. 
Updated on
1 min read

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் செலவில் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் ரயில்வே மேம்பாலங்களில் மின்விளக்கு வசதி தொடங்கி வைக்கப்பட்டது. 
நாமக்கல்லில் உள்ள சேந்தமங்கலம் சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஒரு பகுதி மற்றும் துறையூர் சாலையில் இருந்து சேந்தமங்கலம் சாலைக்கு அமைக்கப்பட்ட இணைப்பு சாலை ஆகியவற்றில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15  லட்சம் செலவில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. 
இதைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடந்தது.  நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்.எல்.ஏ.  கே.பி.பி.பாஸ்கர் தலைமை வகித்தார்.  இதில் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.  இதில் நகராட்சி ஆணையர் கே.பாலசுப்பிரமணியன்,  பொறியாளர் கமலநாதன்,  நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் கே.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ராசிபுரம்:  ராசிபுரம்-சேலம் ரயில்வே மேம்பாலத்தில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய மின் விளக்குகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பில் வஉசி பூங்காவில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகள் இயக்கிவைக்கப்பட்டன.  இந்த நிகழ்வுக்கு எம்.பி.  பி.ஆர்.சுந்தரம் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா மின் விளக்குகளை இயக்கிவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com