ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிராம ஊராட்சி செயலர் காலி பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :29 மார்ச் 2018, 2:41 am

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 29 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
  கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு 18 வயது பூர்த்தியடைந்த எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்.  இப் பதவிக்கு வரும் ஜூலை 1 ஆம் தேதி  அன்று பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு மேற்படாதவராகவும்,  பிற்படுத்தப்பட்ட ,  மிகவும் பிற்படுத்தப்பட்ட,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 
 மேலும்,  இப் பணிக்கு விண்ணப்பிப்போர் ஊராட்சி செயலாளர் பணி காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.  தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்த கிராம ஊராட்சியில் இல்லாதபட்சத்தில், அதே ஊராட்சி ஒன்றியத்தின் அந்த கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சியைச் சார்ந்தவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும்.
   காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இனச் சுழற்சி முறை,  மாதிரி விண்ணப்பப் படிவம் உட்பட இதர விவரங்கள் அந்தந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. 
     பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை,  உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு நேரிலோ,  பதிவஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம். 
விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்குப் பின்னர் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை 
அனுப்பப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.