குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் குழாயில் சாய மற்றும் சாக்கடைக் கழிவுகள் கலந்து துர்நாற்றத்துடன் புதன்கிழமை குடிநீர் விநியோகிக்கப்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் காணப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி, 20, 22 மற்றும் 25-வது வார்டு பகுதிகளான அப்பன்காடு, பாலக்கரை, தம்மண்ணன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக குடிநீர் குழாயில் சாயக் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. மேலும், பெரும்பாலும் நெசவுத் தொழிலாளர்கள் நிறைந்த இப் பகுதியில் தண்ணீரின் இயல்பான நிறத்தில் மாறுதல் காணப்பட்டதோடு, தூர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பில் சாக்கடை, சாயக்கழிவுகள் கலந்திருக்கலாம் எனக் கருதிய பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குடிநீர் குழாயில் சாயக் கழிவுகள் கலந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குழாயில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதோடு, கழிவுகள் கலந்து வரும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும், பின்னர் வரும் நீரைப் பிடித்து பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், அபெக்ஸ் காலனி பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந் நிலையில் அப் பகுதியில் உள்ள சாயப் பட்டறையிலிருந்து இரவில் ரகசியமாக வெளியேற்றப்பட்ட சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் குடிநீர் குழாயில் கலந்து சென்றுள்ளது. உடைப்பு சரி செய்யப்பட்ட பின்னர் தண்ணீர் விநியோகிக்கும்போது, கழிவுகளுடன் கலந்து சென்றுள்ளது என்றனர்.
மேலும், கழிவுகளை வெளியேற்றிய பட்டறைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு, குடிநீர் இணைப்பைத் துண்டித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் குழாயில் சாயப்பட்டறைக் கழிவுநீர் கலந்து வரும், அதனைப் பிடித்து பயன்படுத்த வேண்டாம் எனவும் முன்னெச்சரிக்கையாக நகராட்சி நிர்வாகம் எவ்வித முறையான அறிவிப்பும் செய்யவில்லை.
இந்நிலையில், குழாயில் குடிநீருடன் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தும்போது பாதிப்புகள் ஏற்படும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

