நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 29 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு 18 வயது பூர்த்தியடைந்த எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். இப் பதவிக்கு வரும் ஜூலை 1 ஆம் தேதி அன்று பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு மேற்படாதவராகவும், பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், இப் பணிக்கு விண்ணப்பிப்போர் ஊராட்சி செயலாளர் பணி காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்த கிராம ஊராட்சியில் இல்லாதபட்சத்தில், அதே ஊராட்சி ஒன்றியத்தின் அந்த கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சியைச் சார்ந்தவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும்.
காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இனச் சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உட்பட இதர விவரங்கள் அந்தந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு நேரிலோ, பதிவஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்குப் பின்னர் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை
அனுப்பப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் இணைக்கும் உன்னத விழா: ஆளுநர்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை: மின்னல் பாய்ந்து சிறுவன் பலி

வார பலன்கள் (மே 1 - 7) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

