வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குறைதீர் கூட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.36,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Updated On :14 மே 2018, 9:11 pm

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.36,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 316 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய அலுவலர்களிடம் வழங்கி, துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், 28 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.36,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எம்.துரை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.