வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 

Updated On :5 நவம்பர் 2018, 8:17 am IST

இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 
 நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.  இப் பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. 
 இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார்.  நாமக்கல் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மின் விளக்குகளை ஒளிர விட்டு,  கல்வெட்டைத் திறந்து வைத்தார். 
 பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடும்போதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் வைப்பதாக இருந்தால் கையெழுத்திட மாட்டோம் எனத் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா முழுவதுமே விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் வைக்காத நிலையை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.  இதனால் தமிழகத்தில் எந்த காலத்திலும் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படமாட்டாது. 
 இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.  20 தொகுதிகளிலும் தேர்தல் பணியை தொடங்க தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.  இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றார். 
 இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) என்.கமலநாதன், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் கே.சேகர் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 இதேபோல் மோகனூரில் உள்ள வாங்கல் பிரிவு சாலை அருகே நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கான கல்வெட்டையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.