தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் புறநகர செயற்குழுக் கூட்டம்

மாணிக்கம்பாளையம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் புறநகர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :5 நவம்பர் 2018, 8:54 am IST

மாணிக்கம்பாளையம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் புறநகர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் பூபதி வரவேற்றுப் பேசினார். 
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.  கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இது நடைமுறைக்கு ஒத்துவராத தீர்ப்பு. கிராமப்புறங்களில் பட்டாசு வெடிப்பதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பால் கூட்டுறவு சங்கங்களில் பால் உற்பத்தியாளர்களிடம் பட்டாசுகளை அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி கொடுப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.