திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பாவை கல்வி நிறுவனங்களின்13-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

பொறியியல் துறையில் சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை பொறியியல் பட்டதாரி மாணவர்கள் நிரூபித்துக் காட்ட

Updated On :8 அக்டோபர் 2018, 9:17 am IST

பொறியியல் துறையில் சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை பொறியியல் பட்டதாரி மாணவர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும் என பாவை கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் எம். முருகேசன் வேலாயுதம் பேசினார்.
பாவை கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு 13 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி. நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றினார். பாவை காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் ஜெ. சுந்தரராஜன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் முனைவர் எம். முருகேசன் வேலாயுதம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மேலும் பேசியது:
சமீப காலமாக பொறியியல் படிப்புக்கு மதிப்பு இல்லை என்ற தவறான கூற்று சமூகத்தில் பரவலாகப் பரவி வருகிறது. பொறியியல் பட்டதாரிகளான நீங்கள், அக்கூற்று தவறு என்பதை சமூகத்துக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கொடுக்கும் வகையில் செயல்பட்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
விழாவில் பங்கேற்ற 1,082 பட்டதாரி மாணவ, மாணவியருக்கு பட்டம் மற்றும் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 27 மாணவர்களுக்கு  தங்க நாணயமும், துறை அளவில் முதல் இரண்டு ரேங்குகளைப் பெற்ற மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கல்வி நிறுவன துணைத் தலைவர் டி.ஆர். மணிசேகரன், செயலாளர் டி.ஆர். பழனிவேல், இயக்குநர் - (நிர்வாகம்) கே.கே.இராமசாமி,  இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குநர் (வேலைவாய்ப்பு )- எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.