பிலிக்கல்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்கும் வகையில், வருவாய்த் துறையினர் ஆற்றுப் பாதையில் குழிகள் தோண்டி தடை ஏற்படுத்தினர்.
பிலிக்கல்பாளையம் அருகே எம்.குன்னத்தூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து இரவு, பகலாக இரு சக்கர வாகனத்தின் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பரமத்தி வேலூர் மண்டல துணை வட்டாட்சியர் சசிக்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் அங்கு சென்று மணல் திருட்டைத் தடுக்கும் வகையில், ஜேசிபி வாகனம் மூலம் ஆற்றுப் பாதையில் குழித் தோண்டி பள்ளம் ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு இடையூறின்றி இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் காவிரி ஆற்றில் மணல் திருடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

