அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

விதை பண்ணைகளில்  இணை இயக்குநர் ஆய்வு

கோவை விதைச் சான்றிதழ் இணை இயக்குநர் செல்வராஜ், நாமக்கல் மாவட்டத்தில் விதைச் சான்றிதழ்

Updated On :22 அக்டோபர் 2018, 2:35 am

கோவை விதைச் சான்றிதழ் இணை இயக்குநர் செல்வராஜ், நாமக்கல் மாவட்டத்தில் விதைச் சான்றிதழ் துறையின் பணிகளை அண்மையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமத்திவேலூர் அருகே நடந்தை மற்றும் ராமதேவம் கிராமங்களில் அமைக்கப்பட்டு உள்ள நிலக்கடலை விதைப் பண்ணை மற்றும் எருமப்பட்டி வட்டாரம் காளிசெட்டிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டு ஆமணக்கு விதைப் பண்ணைகளை அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் விதை பரிசோதனை ஆய்வகத்தின் விதை முளைப்புத்திறன் பரிசோதனைகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
 பின்னர் நாமக்கல் விதைச் சான்றிதழ் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், விதைச் சான்றிதழ் பணிகளான விதைப்பண்ணை பரப்பு பதிவு செய்தல், சான்றளிப்பு செய்யப்பட வேண்டிய விதை அளவுகள், விதைப் பண்ணை பதிவேடு, சான்றட்டை இருப்பு பதிவேடு, விதை மாதிரிகள் அனுப்பும் பதிவேடு மற்றும் பணப் பதிவேடுகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
மேலும் விதைப் பண்ணைகள் வயலாய்வு மேற்கொள்ளும்போது கவனிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், நாமக்கல் மாவட்டத்தில் அத்தனூர் பகுதியில் செயல்படும் தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து விதை சுத்திகரிப்புப் பணிகள், வயல்மட்ட விதைகள் இருப்பு, விதை மாதிரிகள் எடுக்கும் பணிகள் மற்றும் பராமரிக்கும் பதிவேடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட விதைச் சான்றிதழ் உதவி இயக்குநர் ஜெகதீசன், விதைச் சான்றிதழ் அலுவலர்கள் ஜெயக்குமார், ராஜ்குமார், பிரேமா மற்றும் உதவி விதை அலுவலர்கள் 
உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.