ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

பரமத்தி வேலூர் வட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பரமத்திவேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
 பரமத்திவேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜு தலைமை வகித்தார். துணைக் கண்காணிப்பாளர் (பயிற்சி) சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிலை வைக்கப்படும் இடம் தீப்பற்றக்கூடியதாக இல்லை என தீயணைப்புத் துறை அலுவலகத்தில் சான்று பெற்றிருக்க வேண்டும். தேவையான மின் வசதி மின்வாரியத் துறையிடம் இருந்து பெறப்படுகிறது என்பதற்கு ஆதாரமான கடிதம் பெறவேண்டும். பொதுக் கூட்டம் மற்றும் ஊர்வலங்களை குறித்த நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போலீஸார் அனுமதித்த வழித்தடத்தில்தான் ஊர்வலம் செல்ல வேண்டும். சிலைகளின் உயரங்கள் குறித்த அளவை விட அதிகமாக இருக்கக் கூடாது. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் வகையில் ரசாயனம் கலந்த கலவைகளால் ஆன சிலைகளை ஆற்றில் கரைக்கக்கூடாது. ஒலிபெருக்கி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மற்ற மதத்தினர் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகில் சிலைகள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
 கூட்டத்தில் வேலூர், நல்லூர், ஜேடர்பாளையம், பரமத்தி, வேலகவுண்டம்பட்டி ஆகிய காவல் நிலையங்களைச் சார்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் இந்து முன்னணி யினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.