கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

நாமகிரிப்பேட்டை  குப்பை கிடங்கில் தீ

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் குப்பைக் கிடங்கில்

Updated On :25 பிப்ரவரி 2019, 8:28 am IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை பலமணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில்18 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும்  குப்பைகளை பேரூராட்சிக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் குப்பைக் கிடங்கில் கொட்டிவருகின்றனர்.  மக்கும் குப்பை மற்றும் மக்காத  குப்பைகளையும் இங்கு கொட்டிவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தக் குப்பைக் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. சுற்றுப்புறப் பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டதால், அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து  வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க சுமார் 3 மணி நேரம் போராடினர். பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.