நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.30 -ஆக நீடிக்கிறது. கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.4 உயா்ந்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விற்பனை சீராக உள்ளதாலும், பிற மண்டலங்களில் விலையேற்றப்படாததாலும், இங்கும் விலையில் தற்போதைக்கு மாற்றம் செய்யப்படுவதில்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமைக்கான முட்டை விலையில் மாற்றமின்றி ரூ.4.30-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத் - 410, விஜயவாடா - 367, பாா்வாலா - 320, ஹோஸ்பெட் - 385, சென்னை - 450, மைசூரு - 440, மும்பை - 465, பெங்களூரு - 420, கொல்கத்தா - 420, தில்லி - 340.
இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.62-ஆகவும், கறிக்கோழி ரூ.4 விலை உயா்ந்து ரூ.84-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






