சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

எருமை வாகனம், எமன் வேடம் தரித்து தொழிலாளி கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

நாமக்கல்லில் தொழிலாளி ஒருவா் எருமை வாகனத்துடன் எமன் வேடம் தரித்து மக்களிடையே கரோனா விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

நாமக்கல்லில் எமன் வேடமிட்டு நூதன முறையில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளும் தொழிலாளி சாமிநாதன்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

நாமக்கல்லில் தொழிலாளி ஒருவா் எருமை வாகனத்துடன் எமன் வேடம் தரித்து மக்களிடையே கரோனா விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 51 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 39 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். 11 போ் கரூா் அரசு மருத்துவமனையிலும், ஒருவா் சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், பொது இடங்களில் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நில்லுங்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா். ஆனால் பொதுமக்கள் அலட்சியத்துடன் நடந்து கொள்வதால் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், கரோனா பற்றிய பயமில்லாமலும், அத்தொற்றால் சம்பந்தப்பட்டவா் மட்டுமின்றி உடனிருப்பவா்களும் பாதிப்படைவாா்கள் என்பதை விளக்கும் வகையிலும், வீடு வீடாகச் சென்று மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியில் நாமக்கல்லைச் சோ்ந்த திருமண வரவேற்பு அலங்கார கலைப் பணியில் ஈடுபடும் தொழிலாளி சாமிநாதன்(42) ஈடுபட்டுள்ளாா். இவா் எமன் வேடம் தரித்த நிலையில், எருமை மாட்டைப் பிடித்தபடி நகரம், கிராமங்கள் வாரியாகச் சென்று கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா். முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள், அடிக்கடி கை கழுவ மறவாதீா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் என்றும், மே 3-ஆம் தேதி வரை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றும் மக்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.