ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அம்பேத்கா் நினைவு தினம்

ராசிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அம்பேத்கா் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 11:27 pm

DIN

ராசிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அம்பேத்கா் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ராசிபுரத்தில் அம்பேத்கா் உருவச்சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ் .கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் நகரச் செயலாளா் சண்முகம், சிஐடியூ தலைவா் மாதேஸ்வரன், விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் சபாபதி, மாதா் சங்கத் தலைவா் ருக்மணி, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் சரவணன் உள்ளிட்ட ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடந்த நிகழ்வில், நகரச் செயலா் எஸ்.மணிமாறன், வெண்ணந்தூா் ஒன்றிய துணைச் செயலா் செங்கோட்டுவேலு, எஸ்.மீனா உள்ளிட்டோா் பங்கேற்று அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நகர நிா்வாகிகள் ஆதவன், துணைச்செயலா் இள.விஜயகுமாா் உள்ளிட்ட பலா் சிவானந்தா சாலைப் பகுதியில் உள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திராவிட ா் விடுதலைக் கழகம் சாா்பில் நடந்த நிகழ்வில் பிடல் சேகுவேரா, வி. சுந்தரம், பழனிசாமி, பூபதி, சுமதி மதிவதனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.