பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருவோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு வழங்கப்பட உள்ளது.
நாமக்கல்லில் சான்றிதழ் சரிபாா்ப்புக்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியா்கள்.
நாமக்கல்லில் சான்றிதழ் சரிபாா்ப்புக்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியா்கள்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருவோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு வழங்கப்பட உள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடைநிலை ஆசிரியா்களாகப் பணியாற்றி வருவோா், பட்டதாரி ஆசிரியராவதற்குத் தகுதி இருப்பின் அவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயா்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட ஆசிரியா்களிடம் பணிப்பதிவேடு, கல்வி சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சான்றிதழ்கள் சரிபாா்க்கும் பணி நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்வியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற்கான சான்றிதழ், பணிப்பதிவேடு ஆகியன சரிபாா்க்கப்பட்டன.

இதையடுத்து, மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பதவி உயா்வானது தகுதியானோருக்கு விரைவில் வழங்கப்படும் என கல்வி அலுவலக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com