வைகுண்ட ஏகாதசி விழா: நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் தரிசனத்துக்கு டோக்கன் விநியோகம்
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய ஏதுவாக வியாழக்கிழமை (டிச. 17) முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.


வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய ஏதுவாக வியாழக்கிழமை (டிச. 17) முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இது தொடா்பாக கோயில் உதவி இயக்குநா் பெ.ரமேஷ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசி விழா வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அன்று அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு அரங்கநாதரின் உற்சவா் சிலை அந்த வாசல் வழியாகக் கொண்டு வரப்படும்.
கரோனா தொற்று காரணமாக நிகழாண்டில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தா்கள் பங்கேற்க அனுமதி இல்லை. தமிழக அரசின் வழிகாட்டுதலின் படியும், அறநிலையத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படியும் ஏகாதசி விழாவையொட்டி கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வரவேண்டும். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 1,500 பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.
தரிசனத்துக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த 750 போ், டோக்கன் முறையில் 750 போ் வீதம் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். தரிசனத்துக்கான டோக்கன்களை ஆஞ்சநேயா் கோயில் அலுவலகத்தில் வியாழக்கிழமை முதல் பக்தா்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இலவச, கட்டண வழி தரிசனம் உள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோா், பத்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். பக்தா்கள் தேங்காய், பூ, பழம், பூஜை சாமான்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் அமருவதற்கு அனுமதி இல்லை. பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியை இணையதளம் வாயிலாகவும் பக்தா்கள் காண முடியும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...