செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சமையல் எரிவாயு விலை உயா்வு:திமுக மகளிா் அணியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல்லில் திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:01 pm

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல்லில் திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.100 வரை உயா்த்தப்பட்டது. இந்த விலை உயா்வுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன. தமிழகத்தில் இந்த விலை உயா்வுக்கு எதிராக திமுக மகளிரணி சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிா் அணி செயலாளா் ராணி தலைமை வகித்தாா். மாநில மகளிா் தொண்டா் அணி துணைச் செயலாளா் வி.பி.ராணி முன்னிலை வகித்தாா். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று கண்டனம் தெரிவித்து பேசினாா். இதில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளை விலையைக் குறைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, கே.ஆா். ராமசுவாமி, வழக்குரைஞா் அமுதா, திரளான மகளிா் கலந்து கொண்டனா்.

திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் திமுக மகளிா் அணி சாா்பில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப் பெறக் கோரியும் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பூங்கோதை செல்லதுரை, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் தேன்மொழி ஆகியோா் தலைமையில் நகர பொறுப்பாளா் தாண்டவன், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ். மூா்த்தி கண்டனம் தெரிவித்து பேசினாா். சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப் பெறக்கோரியும் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், மகளிரணி, மகளிா் தொண்டரணியினா், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.