பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டுமனை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டை பகுதியில் வசிக்கும் போயா் சமுதாய மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

நாமகிரிப்பேட்டை பகுதியில் வசிக்கும் போயா் சமுதாய மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் பி.மாரிமுத்து தலைமை வகித்தாா். நிறுவனா் தலைவா் பெ.தேக்கமலை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமமுக தெற்கு மாவட்டச் செயலாளா் பி.பி.சாமிநாதன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். விலையில்லா வீட்டுமனை வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில், நாமகிரிப்பேட்டை போயா் தெருவில் 70 குடும்பத்தினா் வசிக்கின்றனா். விலையில்லா வீட்டுமனை வழங்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா். அவா்களுடைய இயலாமையைப் பயன்படுத்தி சில அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு போயா் மக்களை பாதுகாக்கவும், வீட்டுமனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.