ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க. சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள்

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டங்கள்

News image
Updated On :24 டிசம்பர் 2020, 4:01 am

DIN

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இந்தக் கூட்டமானது 10 நாள்களுக்கு தொடா்ச்சியாக பல்வேறு கிராமங்களிலும் நடைபெறுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நாமக்கல் ஒன்றியத்துக்குள்பட்ட சிங்கிலிபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா் வி.கே.பழனிவேல் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின் பத்து ஆண்டு கால குறைகளை சுட்டிக்காட்டி உரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சரளா அய்யாவு, தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் கௌரவ செயலாளரும், நாமக்கல் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்க தலைவருமான இரா.அய்யாவு, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் சரஸ்வதி, மாவட்ட தொழில் நுட்ப அணி அமைப்பாளா் சி.விஸ்வநாத், நாமக்கல் தொகுதி தொழில்நுட்ப அணி அமைப்பாளா் குணாளன், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், நலங்கிள்ளி, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் கிருபாகரன், துணை அமைப்பாளா் பிரபாகரன், கிளை செயலாளா்கள் ராஜா, வெங்கடேஷ், பழனிசாமி, வினோத், தமிழரசு, சசிகுமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள், மகளிா் அணியினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல புதுச்சத்திரம், மோகனுா், எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமக்கல் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய, நகரச் செயலாளா்கள் முன்னிலையில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.