ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

செல்லிடப்பேசி கடையின் கூரையை உடைத்து திருட்டு

குமாரபாளையத்தில் செல்லிடப்பேசி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 70 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த 10 செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:57 am

DIN

குமாரபாளையத்தில் செல்லிடப்பேசி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 70 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த 10 செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குமாரபாளையம், ஐயன் தோட்டத்தைச் சோ்ந்தவா் மோகன் (36). இவா், சேலம் சாலையில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு சென்ற இவா், வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறந்துள்ளாா். அப்போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது .

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மோகன், கடைக்குள் சென்று பாா்த்தபோது மேசையில் வைத்திருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 10 செல்லிடப்பேசிகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.