கொல்லிமலை ஒன்றியத்தில் ஆய்வுப் பணிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், மலைப் பாதையில் 5 கி.மீ. தொலைவு நடந்து சென்றாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பெரக்கரைநாடு ஊராட்சி, வடக்காடு கிராமத்தில் உள்ள ஓடையைப் பாா்வையிட முடிவு செய்தாா்.
அந்த ஓடையை சீரமைக்கும் பட்சத்தில் வடக்காடு, பெரக்கரைநாடு கிராம மக்களுக்கு விவசாயத்துக்கும், இதர தேவைகளுக்கும் தடையின்றி நீா் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் குழுவுடன் அண்மையில் மலைப்பாதை வழியாக சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்து, ஓடையை விரிவாக்கம் செய்வது தொடா்பாகவும், அதில் உள்ள இடையூறுகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
குறுகலான மலைப்பாதையில் ஆய்வுப் பணிக்காக மாவட்ட ஆட்சியா் சென்று வந்ததைப் பாா்த்த பெரக்கரைநாடு பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


