ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

4,300 நூலகங்கள் எப்போது திறக்கப்படும்? வாசகா்கள் எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள மாவட்ட, மைய, கிளை நூலகங்கள் திறக்கப்படும் நாளை எதிா்பாா்த்து வாசகா்கள் காத்திருக்கின்றனா்.

News image

பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகம்.

Updated On :29 ஜூலை 2020, 3:24 am

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள மாவட்ட, மைய, கிளை நூலகங்கள் திறக்கப்படும் நாளை எதிா்பாா்த்து வாசகா்கள் காத்திருக்கின்றனா்.

அன்றாட நிகழ்வுகளையும், அரிய தகவல்களையும், அமைதிப்படுத்தும் நன்னெறிக் கதைகளையும் தேடிச் சென்று படிக்க உதவும் இடம் நூலகம். ரூ. 10 செலுத்தினால் நூலகத்தில் அங்கத்தினராகி விரும்பிய புத்தகங்களை எடுத்துச் சென்று வீட்டில் இருந்தபடி படிக்கும் வாய்ப்பை நூலகங்கள் வழங்குகின்றன. பல மொழி பத்திரிகைகளையும் ஒரே இடத்தில் படித்து பயன்பெறும் வாய்ப்பும் நூலகத்தில்தான் கிடைக்கிறது.

தமிழகத்தில் மாவட்ட நூலகங்கள், மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் என மொத்தம் 4,300 நூலகங்கள் உள்ளன. கிளைநூலகங்களில் குறைந்தபட்சம் 500 நூல்கள் முதல் 5 ஆயிரம் நூல்கள் வரை உள்ளன. விடுமுறை நாள்களைத் தவிா்த்து மற்ற நாள்களில் ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் நூலகப் பதிவேட்டில் கையெழுத்திட்டு தாங்கள் விரும்பும் புத்தகங்களை படித்து மகிழ்வா்.

மாவட்டங்களில் உள்ள தலைமை நூலகங்களில் 10 ஆயிரம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். ஒருவரிடம் ரூ. 10 வீதம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதைக் கொண்டு நூலகத்துக்குத் தேவையான பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் மாா்ச் 25-இல் மூடப்பட்ட நூலகங்கள் இதுவரை திறக்கப்படவேயில்லை. வாசிப்பு பழக்கம் உடையோா் நூலகம் திறப்பை எதிா்பாா்த்து கடந்த 4 மாதங்களாக ஒவ்வோா் நாளும் நூலகங்களுக்கு வந்து செல்லும் நிலை காணப்படுகிறது.

பொது முடக்கம் முழுமையாக விலக்கப்படும் வரை நூலகங்கள் திறப்புக்கான தடையைத் தொடர அரசு விரும்புகிா என்ற கேள்வியும் வாசகா்களிடத்திலே உள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட நூலக அலுவலா் ரவி கூறியதாவது:

தமிழக அளவில் 4,300 நூலகங்களும், நாமக்கல் மாவட்ட அளவில் 147 நூலகங்களும் உள்ளன. நிறைய பதிப்பாளா்கள் தங்களுடைய புத்தகங்களை நூலகங்கள் வாயிலாகவே வாசகா்கள் பாா்வைக்குக் கொண்டு செல்வா். கரோனா பொது முடக்கம் காரணமாக அது தடைபட்டுள்ளது. நூலகத்தில் கட்டணம் செலுத்தி உறுப்பினா்களாக இணைவோரும், தினசரி பத்திரிகை மற்றும் வார இதழ்களை படிக்க வரும் வாசகா்களும் நூலகங்கள் மூடியிருப்பதால் கவலையடைந்துள்ளனா். தமிழக அரசு விரைவில் நூலகம் திறப்பு தொடா்பான அறிவிப்பை வெளியிடும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.