கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்: 60 சதவீத பயணிகளுடன் 120 அரசு பேருந்துகள் இயக்கம்

கரோனா பொது முடக்கம் தளர்வால், நாமக்கல் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 60 சதவீத  பயணிகளுடன் திங்கள்கிழமை 120 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜூன் 2020, 3:11 am

DIN

கரோனா பொது முடக்கம் தளர்வால், நாமக்கல் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 60 சதவீத  பயணிகளுடன் திங்கள்கிழமை 120 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலால், மார்ச் 25–ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பேருந்து சேவை இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது 5–ஆம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களிலும் போக்குவரத்து சேவை தொடங்குவதை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் பிற மாவட்டங்களில் இருந்து தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படாததால் பலர் நடந்தே சென்று வந்தனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து போக்குவரத்து தொடங்குகிறது. அதன்படி, நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்கள் ஒரு மண்டலமாக உருவாக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பேருந்துகள், 60 சதவீத பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மண்டலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு எவ்வித அனுமதியும் பெறாமல் பேருந்தில் பயணிக்கலாம்.

சேலம் கோட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல்–பரமத்தி சாலையில் ஒரே வளாகத்தில் 2 பணிமனைகளும், ராசிபுரம், திருச்செங்கோட்டில்  தலா ஒரு பணிமனைகளும் உள்ளன. இவற்றில் இருந்து 50 சதவீத அடிப்படையில் நகர, புறநகர் பேருந்துகள் 120  எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணிக்கு வந்திருந்தனர். இது குறித்து நாமக்கல் கோட்ட பணிமனை மேலாளர் காங்கேயன்  கூறியது; அரசு பேருந்துகள் சேவையை தொடங்க முதல்வர் அனுமதியளித்துள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் 120 பேருந்துகள் அந்தந்த பேருந்து நிலையங்களில் திங்கள்கிழமை காலை. புறப்பட்டது. 

கரோனா பரவாமல் தடுக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கையுறை, முகக் கவசம், கைக் கழுவும் திரவம் வழங்கப்படுகிறது. பின்புற படிக்கட்டுகள் வழியாக பயணிகளை ஏறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சென்றவுடன் நகராட்சி தூய்மை பணியாளர்களால் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி தெளிக்கப்படும். 60 சதவீத பயணிகள் மட்டுமே பேருந்தில் ஏற்றப்படுவார்கள் என்றார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.