தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மிசோரம், சிக்கிம் மாநில பெண்கள் நாமக்கல்லில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

நட்சத்திர உணவகத்தில் பணியாற்றிய, தனியார் கல்லூரிகளில் பயின்று வந்த மிசோராம், சிக்கிம் மாநில பெண்கள் செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News image
Updated On :12 மே 2020, 8:16 am

DIN

நாமக்கல்:  நட்சத்திர உணவகத்தில் பணியாற்றிய, தனியார் கல்லூரிகளில் பயின்று வந்த மிசோராம், சிக்கிம் மாநில பெண்கள் செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அசாம், நாகலாந்து, மேகாலயா, சிக்கிம், மிசோரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் நாமக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்து பணியாற்றியும், கல்லூரிகளில் பயின்றும் வருகின்றனர். கரோனா பொது முடக்கத்தால் கடந்த 50 நாட்களாக ஒரே இடத்தில் தங்கியிருந்து நிவாரண பொருள்கள் மூலம் சாப்பிட்டு நாட்களை கடத்தி வந்தனர். இந்த நிலையில் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். 

இணையதள வழியில் விண்ணப்பிக்க தெரியாததாலும், மொழி பிரச்னையாலும் அம்மாநில பெண்கள் தவித்து வருவது தொடர்பாக தினமணி நாளிதழில் மட்டும் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ. பால் பிரின்ஸிலி ராஜ்குமாருக்கு உத்தரவிட்டார். 

அதனைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை காலை நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பணியாற்றிய 5 பெண்கள், ராசிபுரம், பள்ளிப்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த மாணவியர் இருவர் என மொத்தம் 7 பேர் மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து சளி ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன. அதன்பின் மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட அரசு வாகனம் மூலம் அவர்கள் ஏழு பேரும் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தில்லிச் செல்லும் ரயில்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தங்களுடைய சொந்த மாநிலத்துக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அனுப்பி வைக்க உதவிய மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு, அந்த ஏழு பெண்களும் நன்றி தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.