தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூன்று மாதத்திற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்:  மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

அரசு மணல் குவாரிகள் இயங்காததால் மணல் லாரிகள் வேலையின்றி உள்ளன. இதனால் மூன்று மாதத்திற்கான சாலை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என

News image
Updated On :12 மே 2020, 7:39 am

DIN

நாமக்கல்: அரசு மணல் குவாரிகள் இயங்காததால் மணல் லாரிகள் வேலையின்றி உள்ளன. இதனால் மூன்று மாதத்திற்கான சாலை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து நாமக்கல்லில் அச்சம்மேளனத்தின் தலைவர் செல்ல. ராசாமணி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா தொற்றால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 47 நாட்களாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர்களும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக சுங்க கட்டணம் வசூல், கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் மத்திய அரசு டீசல் விலையை குறைக்காதது, மேலும் தமிழக அரசு டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியதால் கூடுதலாக லிட்டருக்கு ரூ.2.50 உயர்ந்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மட்டுமன்றி, மணல் லாரி தொழில் செய்வோரும் பாதிப்படைந்துள்ளனர். 

மணல் குவாரிகள் இயங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 55,000 மணல் லாரிகள் வேலையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதத்திற்கான காலாண்டு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது. மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்டவை எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

அதற்கேற்றார்போல் தமிழகத்தில் கூடுதல் அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.