தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்: 60 வழக்குரைஞர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி

நாமக்கல் மாவட்டத்தில் பார் கவுன்சிலில் பதிவு பெற்ற வழக்குரைஞர்கள் 60 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி அளிக்கப்பட்டது.

News image
Updated On :19 மே 2020, 7:06 am

DIN

நாமக்கல் மாவட்டத்தில் பார் கவுன்சிலில் பதிவு பெற்ற வழக்குரைஞர்கள் 60 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் வழக்குரைஞர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் பார் கவுன்சிலில் பதிவு பெற வழக்குரைஞர்களில் 60 பேருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி கே.ஹெச்.இளவழகன் வழக்குரைஞர்களுக்கு நிவாரணத்திற்கான காசோலைகளை வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மாவட்ட கௌரவ செயலாளர் வழக்குரைஞர் அய்யாவு செய்திருந்தார். மூத்த வழக்குரைஞர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.